Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்....இனி 2ஜிபி வரையிலான ஃபைல்களையும் அனுப்பலாம்

வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்....இனி 2ஜிபி வரையிலான ஃபைல்களையும் அனுப்பலாம்

By: vaithegi Tue, 14 June 2022 10:21:22 PM

வாட்ஸ்அப்பின்  புதிய  அப்டேட்....இனி  2ஜிபி வரையிலான ஃபைல்களையும்  அனுப்பலாம்

உலகளவில் மிகவும் பிரபலமான செயலியாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது. மேலும், மிகப்பெரிய எண்ணிக்கையில் யூசர்களை கொண்டுள்ளது. கொரோனா வருகையால் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போது வாட்ஸ்அப் பயனுள்ள கருவியாகவும், முக்கிய உதவிகரமான ஒன்றாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய வாட்ஸ்அப் செயலியில் பயனர்களை கவரும் வண்ணம் புதிய புதிய அப்டேட்டுகளை மாதம் ஒரு முறை அறிமுகம் செய்து கொண்டு வருகிறது. அந்த வகையில் டெக்ஸ்ட், வாய்ஸ், வீடியோ, ஆடியோ உரையாடல்களை பயனர்கள் எளிதாக மேற்கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த வாட்ஸ்அப் செயலியில் தற்போது மேலும் பல புது சிறப்புகளை மெட்டா நிறுவனம் நிறுவியுள்ளது.

மேற்குறிப்பிட்ட அம்சங்களை தவிர்த்து சில சமயங்களில் போட்டோ, டாக்குமெண்ட்ஸ் மாதிரியானவையும் ஃபைல்களும் இதில் அனுப்பிக் கொள்வதுண்டு. அப்படி அனுப்பப்படும் ஃபைல்கள் ஒரு குறிப்பிட்ட சைசுக்கு இருந்தால் மட்டுமே அனுப்ப முடியும்.

files,documents,whatsapp ,ஃபைல்கள்,டாக்குமெண்ட்ஸ் ,வாட்ஸ்அப்

அதன் காரணமாக வேறு சில அப்ளிகேஷன்களை பயன்படுத்தி பயனர்கள் அதிக அளவு கொண்ட ஃபைல்களை அனுப்புவது உண்டு. இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் 2ஜிபி வரையிலான ஃபைல்களை அனுப்ப முடியும் அளவுக்கு வாட்ஸ்அப் செயலி அப்டேட்டுகளை மேம்படுத்தியுள்ளது.

மேலும், வாட்ஸ்அப் செயலியில் தற்போது இடம்பெற்றுள்ள அப்டேட்டுகள்
அறிமுகம் இல்லாதவரின் மொபைல் எண்ணை சேவ் செய்யாமலேயே அந்த நபருக்கு டைரக்ட் மெசேஜ் செய்யும் புதிய அம்சம். ரியாக்சனை வெளிப்படுத்த, பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இருப்பதை போன்று எமோஜி. வாட்ஸ்அப் குரூப்பில் எந்த நபரும் பதிவிடும் தகவலை, அதன் அட்மின் நீக்குவதற்கான வசதி. வாட்ஸ் அப் குரூப் வாய்ஸ் காலில் 32 பேர் வரை பங்கேற்கும் வசதி. பல வாட்ஸ் அப் குரூப்களை கையாளும் வசதி என மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து வகையான வசதிகளும் தற்போது அறிமுகமாகி நடைமுறையில் இருந்து வருகிறது.

Tags :
|