Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கையில் கோதுமை மாவு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு

இலங்கையில் கோதுமை மாவு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு

By: vaithegi Wed, 31 Aug 2022 4:47:45 PM

இலங்கையில் கோதுமை மாவு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு

இலங்கை: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்கு உள்ளான மக்கள் மிகப்பெரும் புரட்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடியனர்.

எனவே இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே வெளி நாட்டுக்கு தப்பி சென்றார். இலங்கையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே கடந்த மாதம் 21-ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

sri lanka,wheat flour ,இலங்கை,கோதுமை மாவு

இதைதொடர்ந்து இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசு அமைந்தாலும், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் பல்வேறு இடங்களில் நடைபெற்று கொண்டு வருகிறது. இந்நிலையில், இலங்கையில் கோதுமை மாவு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக, தலைநகர் கொழும்புவில் 2000 ஆயிரம் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.

மேலும் யாழ்பாணத்தில் எல்லா பேக்கரி கடைகளும் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மக்களின் காலை உணவாக பிரட்(ரொட்டி) சாப்பிடுவதாக கூறப்படுகிறது. ஒரு பாக்கெட் பிரட் ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 50 கிலோகிராம் நிறையுடைய கோதுமை மா மூடை ஒன்றின் விலை தற்போது 20 ஆயிரம் ரூபாவாக உயர்ந்துள்ளது.

Tags :