தேர்தலை வருவதால் பொதுத் தேர்வை எப்போது நடத்துவது; தமிழக அரசு திட்டம்
By: Nagaraj Mon, 16 Nov 2020 9:33:02 PM
தமிழக அரசின் அதிரடி திட்டம்... தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வை விரைவில் நடத்தி முடிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வந்தது.
இந்நிலையில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு 10,11,12 ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும், அதற்கான பொதுத் தேர்வு
அட்டவணையை தமிழக அரசிடம் தேர்வுத்துறை சமர்ப்பித்துள்ளதாகவும் தகவல்
வெளியாகியுள்ளது.
அதன்படி 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும்
மாணவர்களுக்கு ஜூன் மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.
மற்ற வகுப்பு மாணவர்களுக்கு அதன்பிறகு தேர்வு நடைபெறும்.