Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எப்போது உச்சத்தை தொடும் ?

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எப்போது உச்சத்தை தொடும் ?

By: Karunakaran Mon, 15 June 2020 09:55:09 AM

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எப்போது உச்சத்தை தொடும் ?

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா நோயாளிகளை கவனித்து சிகிச்சை அளிக்க அரசுகள் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து கொண்டே இருக்கின்றன. தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க செய்யப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகள் :
கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் மொத்தம் 958. அதில் தனிமைப்படுத்தப்பட்ட மொத்த படுக்கைகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 67 ஆயிரத்து 883. கொரோனாவுக்கு 2,313 கொரோனா சுகாதார மையங்கள் உள்ளன. 7,525 கொரோனா பராமரிப்பு மையங்கள் உள்ளன. வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 494 ஆக உள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் எப்போது உச்சம் தொடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் செயல்பாட்டு ஆராய்ச்சி குழு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில், இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தை அடைவதற்கு 34 நாட்கள் என்பதை 74 நாட்கள் என தாமதம் ஏற்படுத்தி உள்ளது. இதனால், நவம்பர் மாதம் மத்தியில் கொரோனா உச்சத்தை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

coronavirus,india,medical research,curfew ,இந்தியா,கொரோனா வைரஸ்,மருத்துவ ஆராய்ச்சி,ஊரடங்கு

மேலும், 60 சதவீத செயல்திறனுடன், பொது சுகாதார நடவடிக்கைகள் இயங்கும் நிலையில், அவை நவம்பர் முதல் வாரம் வரை தேவைகளை சந்திக்கிற அளவுக்கு இருக்கும் எனவும், 5.4 மாதங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் போதாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வென்டிலேட்டர்கள் 3.9 மாதங்களுக்கு போதுமானதாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கினால் கொரோனா தொற்று உச்சம் அடைவது தாமதமாகும். மேலும் சோதனை செய்தல், நோயாளிகளை கண்டறிதல், தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல், தொடர்பு தடம் அறிதல் ஆகியவற்றை தற்போது செய்வது போல தடுப்பூசி கிடைக்கிறவரை தொடர்கிறபோது, தொற்றின் பாதிப்பு குறையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நவம்பர் மத்தியில்தான் கொரோனா உச்சம் பெறும் என்ற ஆய்வின் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|