Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு போக்குவரத்து எப்போது துவங்கும்?...பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அரசு போக்குவரத்து எப்போது துவங்கும்?...பொதுமக்கள் எதிர்பார்ப்பு

By: Monisha Fri, 28 Aug 2020 09:22:28 AM

அரசு போக்குவரத்து எப்போது துவங்கும்?...பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பொதுபோக்குவரத்து கடந்த ஐந்து மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட பணிமனைகளில் பல்லாயிரக்கணக்கான பஸ்கள் இயக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளன. ஐந்து மாதங்களாக உழைப்பேதுமின்றி எட்டு மண்டலங்களில் பணிபுரியும் லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் முடங்கியுள்ளனர். ஊரடங்கில் மெல்ல, மெல்ல அரசு பல தளர்வுகளை படிப்படியாக கொண்டு வருவது போல பொது போக்குவரத்தையும் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் தரப்பிலும், தொழிலாளர்கள் தரப்பிலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் ஏழை, எளிய மக்களுக்கான ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். சாதாரண காலங்களில் தினசரி சுமார் இரண்டு கோடி மக்கள் அரசின் 21,542 பஸ்களில் பயணித்தனர். இதன் மூலமாக தினசரி அரசுக்கு சுமார் 30 கோடி ரூபாய் வருமானம் வந்தது. இதன் மூலமாக சுமார் 1,31,000 தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 450 கோடி சம்பளப்பணம் தரப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஐந்து மாதங்களாக வருமானமில்லாத நிலையில் மாத மாதம் ஊழியர்கள் குடும்பம் வறுமையில் வாடக் கூடாதே என்பதற்காக சம்பளம் தாய்மனதுடன் தமிழக அரசால் தரப்பட்டு வருகிறது.

corona virus,government transport,buses,public,expectation ,கொரோனா வைரஸ்,அரசு போக்குவரத்து,பஸ்கள்,பொதுமக்கள்,எதிர்பார்ப்பு

அரசு போக்குவரத்து முடங்கியிருப்பதால் அவசர காரணங்களான மருத்துவம், மரணம், திருமணம் உள்ளிட்டவைகளுக்காக பயணம் செய்பவர்கள் தனியார் டிராவல் ஏஜென்சிகளுக்கு அதிக பணம் கொடுத்து பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த வகையில் மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களில் இருந்து பயணிக்கும் பயணிகள் தலைக்கு ரூபாய் 3,000 மற்றும் 4,000 தர வேண்டியுள்ளதாக சொல்கிறார்கள். அரசு கழக பஸ்களையே கூட சொந்த திருமண நிகழ்வு செல்வதற்கு போன்ற காரணங்களுக்காக மொத்த வாடகை செலுத்தி எடுத்து கொள்ளலாம். இது மக்களுக்கு தெரிவதில்லை.

ஆனால், தனியார் டிராவல் ஏஜென்சிகளே இப்படி அரசு பஸ்களை வாடகைக்கு எடுத்து லாபம் சம்பாதிக்கும் போக்கும் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆகவே, தமிழக அரசு பொதுபோக்குவரத்தை ஆங்காங்கே உள்ள கள நிலவரத்தை கருத்தில் கொண்டு சிறிது, சிறிதாக அதிகரிக்க வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கை.

Tags :
|
|