Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்?

தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்?

By: Monisha Sat, 27 June 2020 4:04:50 PM

தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 74,622 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 41,357 பேர் கொரோனாவுக்கு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனால் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 957-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதலே பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. 10-ம் வகுப்பு மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போதைய நிலையில் சூழலில் பள்ளிகள் திறப்பது என்பது சாத்தியமில்லை. பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ஆன்லைன் வகுப்புகளை பொறுத்தவரை 2 நாட்களுக்குள் முதலமைச்சருடன் பேசி முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :