Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நீங்கள் சென்ற இடத்திலாவது நிம்மதியாக இருங்கள் - ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்டால் பரபரப்பு

நீங்கள் சென்ற இடத்திலாவது நிம்மதியாக இருங்கள் - ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்டால் பரபரப்பு

By: Monisha Wed, 17 June 2020 1:24:08 PM

நீங்கள் சென்ற இடத்திலாவது நிம்மதியாக இருங்கள் - ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்டால் பரபரப்பு

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இருப்பினும் சுஷாந்த்சிங்கின் தற்கொலைக்கு பாலிவுட் திரையுலகே ஒரு காரணம் என்று கூறப்படுகிறது

சாதாரண குடும்பத்திலிருந்து வந்து, மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு மிகக்குறைந்த காலத்தில் வளர்ந்த சுஷாந்த்சிங்கின் அபரீதமான வளர்ச்சி பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு உறுத்தியதாகவும், இதனால் கடந்த ஒரு வருடமாக சுஷாந்த் சிங்கை பாலிவுட் திரையுலகம் ஒட்டுமொத்தமாக ஒதுக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால்தான் சுஷாந்த்சிங் மன உளைச்சலுக்கு ஆளாகி, ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் சுஷாந்த்சிங் ரசிகர்கள் பிரபல பாலிவுட் நடிகர் நடிகைகளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

actor sushant singh,ar rahman,suicide,bollywood,depression ,நடிகர் சுஷாந்த்சிங்,ஏ.ஆர்.ரஹ்மான்,தற்கொலை,பாலிவுட்,மன உளைச்சல்

இந்த நிலையில் ஏஆர் ரஹ்மான் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கூறும்போது:- என்ன ஒரு வழியை தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள் சுஷாந்த்சிங்... நீங்கள் சென்ற இடத்திலாவது நிம்மதியாக இருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏஆர் ரஹ்மானின் இந்த டுவிட் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுஷாந்த்சிங்கின் மன உளைச்சலுக்கான காரணத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டில் மறைமுகமாக சுட்டிக்காட்டி உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Tags :