Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரேசில் நாட்டினர் அமெரிக்காவில் நுழைவதற்கு தடை விதித்தது வெள்ளை மாளிகை!

பிரேசில் நாட்டினர் அமெரிக்காவில் நுழைவதற்கு தடை விதித்தது வெள்ளை மாளிகை!

By: Monisha Tue, 26 May 2020 3:42:27 PM

பிரேசில் நாட்டினர் அமெரிக்காவில் நுழைவதற்கு தடை விதித்தது வெள்ளை மாளிகை!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பதித்த நாடுகளின் பட்டியலில் பிரேசில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. அங்கு நேற்றய நிலவரப்படி 3 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், 22 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாகவும் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் கூறுகிறது.

இந்த நிலையில் பிரேசில் நாட்டில் இருந்து வருகிறவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு அமெரிக்கா வெள்ளை மாளிகை அதிரடியாக தடை விதித்துள்ளது.

brazil,usa,coronavirus,white house,prohibition ,பிரேசில் நாட்டினர்,அமெரிக்கா,கொரோனா வைரஸ்,வெள்ளை மாளிகை,தடை விதிப்பு

இதையொட்டி வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “வெளிநாட்டினரின் நுழைவை தடுத்து நிறுத்துவதின் மூலம் நமது நாட்டைப் பாதுகாக்க ஜனாதிபதி தீர்க்கமான நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி பிரேசிலில் சமீபத்தில் 14 நாட்கள் இருந்த வெளிநாட்டினர் அமெரிக்கா வர பயண தடை விதிக்கப்படுகிறது”.

மேலும், பிரேசிலில் இருந்த வெளிநாட்டினர், அமெரிக்காவில் கூடுதல் தொற்றுக்கான ஆதாரமாக மாறாமல் இருக்க இந்த நடவடிக்கை உதவும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு 28-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Tags :
|
|