Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தின் பல பகுதிகளில் வெளுத்தெடுத்த மழை... வெப்பம் தணிந்தது

தமிழகத்தின் பல பகுதிகளில் வெளுத்தெடுத்த மழை... வெப்பம் தணிந்தது

By: Nagaraj Tue, 02 May 2023 12:04:44 PM

தமிழகத்தின் பல பகுதிகளில் வெளுத்தெடுத்த மழை... வெப்பம் தணிந்தது

சென்னை: வெளுத்தெடுத்த மழை... சென்னையில் நேற்று காலையிலிருந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், அதன் பிறகு நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, வேளச்சேரி, ஆலந்தூர், மீனம்பாக்கம் , பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று பகலில் மிதமான மழை பெய்த நிலையில், இரவு நேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. திருவொற்றியூர் பகுதியிலும் மழை வெளுத்து வாங்கியது.

heavy rain,midnight,thanjavur district,cold wind,poured down ,கனமழை, நள்ளிரவு, தஞ்சை மாவட்டம், குளிர்காற்று, கொட்டி தீர்த்தது

வடசென்னையிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சென்னையில் கோடம்பாக்கம், நுங்கம் பாக்க்கம், சூளைமேடு, வடபழனி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் படாளம் பகுதியில் பெய்த மழையால், அங்குள்ள அரசின் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகின. நெல்மணிகள் முளை விடும் சூழல் ஏற்பட்டுள்ளதால், நனைந்த மூட்டைகளை அரிசி ஆலைகளுக்கு விரைந்து எடுத்து செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்தது, விடிய விடிய பெய்த மழையால் குளிர்காற்று வீசியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. காஞ்சிபுரம், ஓரிக்கை, செவிலிமேடு, வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது.

Tags :