Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவின் ஜெங்ஜோ உயிரியல் பூங்காவில் ஒரே பிரசவத்தில் 6 குட்டிகளை ஈன்ற வெள்ளைப்புலி

சீனாவின் ஜெங்ஜோ உயிரியல் பூங்காவில் ஒரே பிரசவத்தில் 6 குட்டிகளை ஈன்ற வெள்ளைப்புலி

By: Nagaraj Mon, 24 Apr 2023 7:23:17 PM

சீனாவின் ஜெங்ஜோ உயிரியல் பூங்காவில் ஒரே பிரசவத்தில் 6 குட்டிகளை ஈன்ற வெள்ளைப்புலி

சீனா: ஒரே பிரசவத்தில் 6 குட்டிகள்... சீனாவின் ஜெங்ஜோ நகர உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த அரியவகை வங்கத்து வெள்ளைப் புலி ஒரே பிரசவத்தில் 6 குட்டிகளை ஈன்றுள்ளது.

மரபணு பிறழ்ச்சியால் சில வங்கத்து புலிகள் ஆரஞ்சு நிறத்திற்கு பதிலாக வெள்ளை நிறத்தில் பிறக்கின்றன. அழிவின் விளிம்பில் உள்ளதால் வங்கப் புலி, பாதுகாக்கப்பட்ட விலங்கினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

tigress,cubs,incubator,attractive,rare species ,தாய்புலி, குட்டிகள், இன்குபேட்டரி, கவர்கிறது, அரிய வகை

வழக்கமாக, ஒரு புலி, 2 முதல் 4 குட்டிகள் வரை ஈனும். ஆனால், சீன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த வெள்ளை நிற வங்கத்துப் புலி, 6 குட்டிகளை ஈன்றுள்ளது.

தாய் புலியின் சிரமத்தை குறைக்க, குட்டிகளை பூங்கா ஊழியர்கள் முதலில் இன்குபேட்டரில் வைத்து வளர்த்தார்கள். அவை, தற்போது துள்ளிக் குத்தித்து விளையாடுவது, அனைவரையும் கவர்கிறது.

Tags :
|