Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • யார் செய்தது இது... விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல்களை அனுப்பிய மர்மநபர்கள்

யார் செய்தது இது... விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல்களை அனுப்பிய மர்மநபர்கள்

By: Nagaraj Sun, 04 Dec 2022 3:33:01 PM

யார் செய்தது இது... விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல்களை அனுப்பிய மர்மநபர்கள்

மாட்ரிட்: விலங்குகளில் கண்கள் அடங்கிய பார்சல்கள்... ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல உக்ரைன் நாட்டின் தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல் அனுப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாட்ரிட்டில் உள்ள உக்ரைன் தூதரகத்திற்கு வெள்ளிக்கிழமை விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல் கிடைத்தது. ஆனால் அதில் வெடிக்கும் பொருள் எதுவும் இல்லை. இதனையடுத்து மாட்ரிட்டில் உள்ள உக்ரைன் தூதரகத்தை போலீசார் சுற்றி வளைத்தனர், மோப்ப நாய்களுடன் அந்த பகுதியை தேட ஆரம்பித்தனர்.

சம்பவம் குறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒலெக் நிகோலென்கோ கூறுகையில், ஒரு வினோத திரவத்தில் ஊறவைக்கப்பட்ட பார்சல்கள் ஹங்கேரி, நெதர்லாந்து, போலந்து, குரோஷியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள உக்ரைன் தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ukraine,embassies,animal eyes,parcel,shock ,உக்ரைன், தூதரகங்கள், விலங்குகளின் கண்கள், பார்சல், அதிர்ச்சி

மேலும், நேபிள்ஸ் மற்றும் கிராகோவில் உள்ள பொது தூதரகங்களுக்கும், ப்ர்னோவில் உள்ள தூதரகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட அனைத்து தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களை பலத்த பாதுகாப்புடன் இருக்க உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10 மாதங்களை கடந்தும் முடிவில்லாமல் நீண்டு வருவதுடன், போரில் உக்ரைன் மற்றும் ரஷியா என இருதரப்பு ராணுவமும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|