Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ‘மங்கி பாக்ஸ்’ தொற்றால் யாருக்கெல்லாம் ஆபத்து..? உஷார் மக்களே:

‘மங்கி பாக்ஸ்’ தொற்றால் யாருக்கெல்லாம் ஆபத்து..? உஷார் மக்களே:

By: Monisha Mon, 18 July 2022 8:26:45 PM

‘மங்கி பாக்ஸ்’ தொற்றால் யாருக்கெல்லாம் ஆபத்து..? உஷார் மக்களே:

தமிழ்நாடு: மங்கி பாக்ஸ் என்பது ஒரு அரிய வகை வைரஸ் தொற்று ஆகும், இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும், அதன் பின்னர் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து மற்றொருவருக்கும் பரவக்கூடியது. கொரோனா தொற்றின் கோரதாண்டவத்தில் இருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளில் மங்கி பாக்ஸ் நோய் தீவிரமாக பரவிவருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மங்கி பாக்ஸ் ஃஓயின் அறிகுறிகள் தானாகவே ஒரு சில வாரங்களில் மறைந்துவிடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தாலும், இந்நோயால் தீவிர சிக்கல்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இரண்டாம் நிலை தோல் நோய்த்தொற்றுகள், நிமோனியா, குழப்பம் மற்றும் கண் பிரச்சினைகள் ஆகியவை ஏற்படக்கூடும் என எச்சரிக்கைப்பட்டுள்ளது. கடந்த காலத்தில், மங்கி பாக்ஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 1% முதல் 10% பேர் இறந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக மங்கி பாக்ஸ் காய்ச்சலால் பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரளா திரும்பிய ஒருவருக்கு மங்கி பாக்ஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

monkey box,infection,beaware,people ,மங்கி பாக்ஸ்,வைரஸ்,பிரச்சினை,
ஆபத்து,

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் ஏஎன்ஐ கூறுகையில், "இதுபற்றி கவலைப்படவோ, அச்சப்படவோ ஒன்றுமில்லை.அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு நோயாளியின் உடல்நிலை சீராக உள்ளது.இந்தியாவில் இதுவரை மங்கி பாக்ஸ் நோய் கட்டுப்பாட்டிற்குள் இருப்பது சற்றே ஆறுதல் அளிக்க கூடிய விஷயமாக இருந்து வருகிறது.

மங்கி பாக்ஸ் உள்ள ஒருவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் (பாலியல் தொடர்பு உட்பட) வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கூடுதலாக, எலி, அணில், குரங்குகள் போன்ற விலங்குகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பவர்களுக்கு இந்நோய் பரவும் அபாயம் அதிகமுள்ளது. எனவே இவர்கள் தொடர்ந்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களை பாதுகாத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags :