Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜெயலலிதாவின் ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க போவது யார்? - இன்று தீர்ப்பு

ஜெயலலிதாவின் ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க போவது யார்? - இன்று தீர்ப்பு

By: Monisha Wed, 27 May 2020 09:18:19 AM

ஜெயலலிதாவின் ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க போவது யார்? - இன்று தீர்ப்பு

அ.தி.மு.க.வை சேர்ந்த புகழேந்தி என்பவர், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் உள்பட சுமார் ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர்களான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். ஐகோர்ட்டில் அவர்கள் இருவரும் நேரில் ஆஜராகி, ஜெயலலிதாவின் வாரிசுகள் தாங்கள் என்றும் தங்களை சட்டப்பூர்வமான வாரிசுகளாக அறிவிக்க வேண்டும் என்றும் தனியாக மனு தாக்கல் செய்தனர். மேலும், விசாரணையின்போது, ஜெயலலிதா ரூ.40 கோடி வருமானவரி பாக்கி வைத்துள்ளதாக வருமான வரித்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

jayalalithaa,rs 913 crore in assets,chennai high court,admk,income tax department ,ஜெயலலிதா,ரூ.913 கோடி சொத்து,சென்னை ஐகோர்ட்,அ.தி.மு.க. புகழேந்தி,வருமான வரித்துறை

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டனர். இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதிகள் பிறப்பிக்கின்றனர். இதுதொடர்பான அறிவிப்பை ஐகோர்ட்டு பதிவுத்துறை நேற்று வெளியிட்டுள்ளது.

அதேநேரம், போயஸ் கார்டன் வீடு மற்றும் அங்குள்ள அசையா சொத்துக்களை அரசின் பராமரிப்புக்கு மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் அண்மையில் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|