Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? கமல் கேட்ட அதிரடி கேள்வி

ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? கமல் கேட்ட அதிரடி கேள்வி

By: Nagaraj Fri, 18 Dec 2020 10:01:37 PM

ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? கமல் கேட்ட அதிரடி கேள்வி

பிக்பாஸ் யார்? என்று கேட்டு அதிமுகவினரை செம டென்ஷன் ஆக்கியுள்ளார் கமல்.

அதிமுக ஆட்சி மீது தொடர் குற்றச்சாட்டுகளை கூறிவந்ததால், இதுநாள் வரையிலும் கமல் குறித்து எதுவும் பேசாமல் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் நெருக்கத்திலும் மவுனமாக இருந்தால் சரிப்பட்டு வராது என்றுதான் பதிலடி கொடுத்தார்.

பிக்பாஸ் நடத்துகிறவர் எல்லாம் அரசியலுக்கு வந்தால் சரிப்படுமா? பிக்பாஸ் மூலம் நல்ல குடும்பங்களை உருப்படாமல் ஆக்குகிறார் என்று கடுமையாக சாடிய பின்னரும், முதல்வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கிறார் என்பதால் மகிழ்ச்சி என்று தெரிவித்திருந்தார் கமல்.

kamal,big boss of contractors,aiadmk,chatter ,கமல், ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ், அதிமுக, சலசலப்பு

அதன் பிறகு அதிமுக அமைச்சர்கள் பலரும், முதல்வரும் சரி, அமைச்சர்களும் சரி யாரும் பிக்பாஸ் பார்ப்பதில்லை. அது நல்ல நிகழ்ச்சியும் அல்ல என்று பேசி வருகிறார்கள்.

இது கமலுக்கு மேலும் ஆத்திரமூட்ட, ''நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் 170 கோடிகளை வருமானவரித் துறை கைப்பற்றியது நினைவிருக்கலாம். ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? '' என்று கேட்டிருக்கிறார்.

பிக்பாஸ் சர்ச்சைக்கு பிக்பாஸ் மூலமே அவர் பதிலடி கொடுத்திருந்தாலும், பிக்பாஸ் யார் ? என்று அவர் யாரை கேட்கிறார் என்று தெரியும் என்பதால், அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
|
|