Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது; அமெரிக்க வாழ் இந்துக்கள் குழப்பம்

அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது; அமெரிக்க வாழ் இந்துக்கள் குழப்பம்

By: Nagaraj Thu, 22 Oct 2020 12:27:29 PM

அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது; அமெரிக்க வாழ் இந்துக்கள் குழப்பம்

காரசார விவாதம் நடக்கிறது... அமெரிக்க அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்த விவாதம் அமெரிக்க வாழ் இந்துக்களிடையே நடைபெற்று வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடும் ஜனநாயக கட்சிக்கு ஆதரவளிப்பதா, டிரம்புக்கு ஆதரவளிப்பதா என்ற குழப்பம் அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

life in america,hindus,support,chaos,elections ,அமெரிக்கா வாழ், இந்துக்கள், ஆதரவு, குழப்பம், தேர்தல்

வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டுமொத்த உலக நாடுகளும் உற்று நோக்கி வருகின்றன. குடியரசுக் கட்சி சார்பில் டிரம்பும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் அதிபர் வேட்பாளர்களாக களத்தில் நிற்கின்றனர்.

அவர்கள் இருவரும் தங்களுக்கான ஆதரவை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவரை ஒருவர் பரஸ்பர குற்றச்சாட்டு தெரிவித்து மக்களின் நன்மதிப்பை பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளன. இந்நிலையில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஓட்டை வளைக்க அவர்கள் இருவரும் முட்டி மோதி வருகின்றனர்.

Tags :
|
|