Advertisement

உலகை மீண்டும் அச்சுறுத்தும் ஆபத்து ... WHO எச்சரிக்கை

By: vaithegi Wed, 30 Nov 2022 2:23:26 PM

உலகை மீண்டும் அச்சுறுத்தும் ஆபத்து   ...   WHO எச்சரிக்கை

இந்தியா: கத்தார் நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் (FIFA) நடைபெற்று கொண்டு வருகிறது. அதனால் 16 அணிகளும், 12 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களும் மற்றும் பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் கால்பந்து மைதானத்தில் கூடியுள்ளனர். இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதாவது,கத்தாரில் லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் ஒட்டக காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த காய்ச்சல் பரவினால் 3-ல் 1 பங்கு மக்களை பாதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

who,camel fever ,WHO ,ஒட்டக காய்ச்சல்

இதனை அடுத்து முன்னதாக இந்த ஒட்டகக் காய்ச்சல் கடந்த 2012 ஆம் ஆண்டு சவூதி அரேபியா, ஜோர்டான், ஏமன் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் பரவியது. இக்காய்ச்சல் மனிதர்களுக்கு மட்டுமின்றி ஒட்டகங்களுக்கும் பரவக்கூடியது.

மேலும் அத்துடன் கொரோனா,குரங்கு அம்மை உள்ளிட்ட 8 விதமான பெருந்தொற்றுகளில் ஒட்டக காய்ச்சலும் ஒன்றாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டக காய்ச்சல் சுவாச கோளாறு மூலமாக பரவ வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.


Tags :
|