Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • யார் அடுத்த பிரதமர்? இந்தியா வம்சாவளிகள் பெயர் பட்டியலில் இடம்பிடிப்பு

யார் அடுத்த பிரதமர்? இந்தியா வம்சாவளிகள் பெயர் பட்டியலில் இடம்பிடிப்பு

By: Nagaraj Fri, 08 July 2022 4:17:38 PM

யார் அடுத்த பிரதமர்? இந்தியா வம்சாவளிகள் பெயர் பட்டியலில் இடம்பிடிப்பு

பிரிட்டன்: யார் அடுத்த பிரதமர்... பிரிட்டனின் புதிய பிரதமர் யார் என்ற கேள்விதான் அதிகம் இணையத்தை சுற்றி வருகிறது. பிரிட்டன் அரசியலில் நெருக்கடி நிலை உருவாகியதை அடுத்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். முன்னெப்போதும் இல்லாத வகையில், 40-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில், போரிஸ் ஜான்சன் இந்த முடிவை அறிவித்தார்.

புதிய பிரதமர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அது வரை அவர் பொறுப்புகளை கவனிப்பார் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போரிஸ் ஜான்சனின் ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பணி தொடங்கியுள்ளது. விரைவில் புதிய பிரதமர் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மூவரது பெயர்கள் முன்னணியில் உள்ளன.

அந்த அறிக்கையின்படி, இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், சுயெல்லா பிரவர்மேன் மற்றும் ப்ரீத்தி படேல் ஆகியோரது பெயர்கள் பிரதமர் போட்டியில் அடிபடுகின்றன. பிரிட்டனின் பிரதமராகும் போட்டியில் உள்ள இந்திய வம்சாவளியினரில் முன்னணியில் இருக்கும் பெயர் ரிஷி சுனக். ரிஷி சுனக் போரிஸ் அரசாங்கத்தில் நிதி அமைச்சராக இருந்தார். வியாழன் அன்று, போரிஸ் ராஜினாமா செய்த சிறிது நேரத்திலேயே, அவர் நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

Tags :