Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஈரானின் கொள்கை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் - காமெனி

அமெரிக்க தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஈரானின் கொள்கை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் - காமெனி

By: Karunakaran Wed, 04 Nov 2020 08:54:52 AM

அமெரிக்க தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஈரானின் கொள்கை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் - காமெனி

அமெரிக்காவில் ஒபாமா ஆட்சி காலத்தில் கையெழுத்தான ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக கடந்த 2018-ம் ஆண்டு தற்போதையை அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈரானுடன் கடுமையான மோதல் போக்கை கையாண்டு வந்தார். மேலும் அவர் ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தார்.

இந்நிலையில் நேற்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் டிரம்ப் மேலும் 4 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக இருக்க போகிறாரா அல்லது ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் ஆட்சியை கைப்பற்ற போகிறாரா என்பதை தீர்மானிக்க உள்ளது. உலகம் முழுவதும் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

us election,iran,khomeini,trump ,அமெரிக்கத் தேர்தல், ஈரான், காமெனி, டிரம்ப்

இந்த தேர்தலில் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால் அவர் ஈரானுக்கு மேலும் அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஈரானின் கொள்கை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அலி காமெனி கூறுகையில், அமெரிக்காவுடனான எங்கள் கொள்கை எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். எந்த தனிப்பட்ட நபரை சார்ந்தும் அது மாறாது. அமெரிக்க ஜனாதிபதியாக யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்பது முக்கியம் அல்ல என்று கூறினார்.

Tags :
|