Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் விமானத்தை 1670 கோடி ரூபாய்க்கு ஏன் வாங்க வேண்டும்? -ராகுல் காந்தி கேள்வி

576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் விமானத்தை 1670 கோடி ரூபாய்க்கு ஏன் வாங்க வேண்டும்? -ராகுல் காந்தி கேள்வி

By: Karunakaran Thu, 30 July 2020 10:51:00 AM

576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் விமானத்தை 1670 கோடி ரூபாய்க்கு ஏன் வாங்க வேண்டும்? -ராகுல் காந்தி கேள்வி

பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக 5 விமானங்கள் நேற்று இந்தியா வந்தடைந்தன. ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இதுகுறித்து மத்திய அரசை சாடியுள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் விமானத்தை ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டும்? 126 விமானங்களுக்குப் பதிலாக 36 விமானங்கள் வாங்கியது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

rahul gandhi,rafael aircraft,modi,fedarel government ,ராகுல் காந்தி, ரஃபேல் விமானம், மோடி, மத்திய அரசு

இந்துஸ்தான் ஏரோனாடிகல் நிறுவனத்திற்கு பதிலாக திவாலாகிப் போன அனில் அம்பானி நிறுவனத்திற்கு 30 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை வழங்கியது ஏன்? இந்த கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க முடியுமா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரான்சிடம் இருந்து இந்தியா 36 ரபேல் போர் விமானங்களை 58ஆயிரம் கோடி மதிப்பில் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள் ஆகும். இதன் முதல் 5 ரபேல் போர் விமானங்கள் அம்பாலா விமானப்படை தளத்தில் நேற்று தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.




Tags :
|