Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிறப்புக்கூட்டத்தை கூட்டி மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவது ஏன்?

சிறப்புக்கூட்டத்தை கூட்டி மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவது ஏன்?

By: Nagaraj Sat, 18 Nov 2023 6:07:53 PM

சிறப்புக்கூட்டத்தை கூட்டி மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவது ஏன்?

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி... ஆளுநருக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சட்டப்பேரவை சிறப்புக்கூட்டத்தை கூட்டி மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றினார்.

special meeting,minister durai murugan,bills,hearing ,சிறப்பு கூட்டம், அமைச்சர் துரைமுருகன், மசோதாக்கள், விசாரணை

அப்போது பேசிய அவர், ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதில் தீர்ப்பு வருவதற்கு முன்பே தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டத்தை கூட்டியது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, வழக்கு சாதகமாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் சிறப்புக் கூட்டத்தை கூட்டி மீண்டும் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதாக பதிலளித்தார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது பேரவை நிறைவேற்றிய மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திட்டே ஆக வேண்டும் என்பதற்காக இப்போது சிறப்புக் கூட்டம் நடைபெறுவதாக அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.

Tags :
|