Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பேரறிவாளன் தாயார் மனுவை சிறைத்துறைக்கு அனுப்பியது ஏன்? நீதிமன்றம் கேள்வி

பேரறிவாளன் தாயார் மனுவை சிறைத்துறைக்கு அனுப்பியது ஏன்? நீதிமன்றம் கேள்வி

By: Nagaraj Thu, 27 Aug 2020 8:20:36 PM

பேரறிவாளன் தாயார் மனுவை சிறைத்துறைக்கு அனுப்பியது ஏன்? நீதிமன்றம் கேள்வி

நீதிமன்றம் கேள்வி... பேரறிவாளன் தாயார் மனு மீது முடிவெடுக்காமல் சிறைத்துறைக்கு அனுப்பியது ஏன்? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவில், ‘முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக எனது மகன் பேரறிவாளன் சிறையில் இருந்து வருகிறான். தற்போது என்னுடைய மகன் புழல் சிறையில் அடைப்பட்டுள்ளான்.

புழல் சிறையில் ஏற்கெனவே 50 கைதிகள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஏற்கெனவே பல்வேறு உடல்நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் பேரறிவாளனுக்கு, கொரோனா நோய்த்தொற்றால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

perarivalan,mother petition,court,case,adjournment ,பேரறிவாளன், தாய் மனு, நீதிமன்றம், வழக்கு, ஒத்தி வைப்பு

எனவே, பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளனுக்கு விடுப்பு வழங்க கோரிய, அற்புதம்மாளின் மனுவை கடந்த ஜூலை மாதம் நிராகரித்துவிட்டதாக சிறைத் துறை தெரிவித்தது. தமிழக அரசின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனுக்கு விடுப்பு வழங்க அதிகாரம் உள்ளதால் பேரறிவாளன் விடுப்பில் செல்ல விலக்களித்து உத்தரவிட தமிழக அரசுக்கு சிறைத் துறை பரிந்துரைத்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது.

இதனிடையே இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளன் தாயாரின் பரோல் மனு மீது தமிழக அரசு முடிவெடுக்காமல் சிறைத்துறைக்கு அனுப்பியது ஏன்? என உயர்நீதிமன்ற கேள்வி எழுப்பியது. மேலும் பரோல் மனு தொடர்பாக அரசு அவகாசம் கேட்டதை அடுத்து வழக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags :
|
|