Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் நடத்திய சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அரசு வெளியிடாதது ஏன்? : ராகுல் கேள்வி

காங்கிரஸ் நடத்திய சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அரசு வெளியிடாதது ஏன்? : ராகுல் கேள்வி

By: Nagaraj Tue, 26 Sept 2023 5:39:26 PM

காங்கிரஸ் நடத்திய சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அரசு வெளியிடாதது ஏன்? : ராகுல் கேள்வி

பிலாஸ்பூர்: காங்கிரஸ் எம்பி ராகுல் கேள்வி... காங்கிரஸ் நடத்திய சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அரசு வெளியிடாதது ஏன் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பினார்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பிலாஸ்பூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பங்கேற்று பேசியதாவது: தற்போது 90 இந்திய அரசு செயலாளர்களில் 3 பேர் மட்டுமே ஓ.பி.சி வகுப்பை சேர்ந்தவர்கள். சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவின் 'எக்ஸ்-ரே' ஆக இருக்கும்.

rahul gandhi,question,caste wise census,public space,public ,ராகுல் காந்தி, கேள்வி, சாதிவாரி கணக்கெடுப்பு, பொது வெளி, பகிரங்கம்

அது நடந்தால்தான் நாட்டில் எஸ்.சி., எஸ்.டி., தலித்கள் மற்றும் பொதுப்பிரிவினர் எத்தனை பேர் என்பதை கண்டறிய முடியும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஏன் பயப்படுகிறீர்கள் என பிரதமர் மோடியிடம் கேட்டேன்.

மக்கள் தொகை தொடர்பான தரவுகளை பொதுவெளியில் பகிரங்கமாக பகிருங்கள் எனக் கூறினேன். காங்கிரஸ் நடத்திய சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அரசு வெளியிடாதது ஏன்?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

Tags :