Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொடநாடு விவகாரத்தில் கொடுத்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை

கொடநாடு விவகாரத்தில் கொடுத்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை

By: Nagaraj Tue, 11 July 2023 8:15:25 PM

கொடநாடு விவகாரத்தில் கொடுத்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை

சென்னை: ஏன் நிறைவேற்றவில்லை... கொடநாடு விவகாரத்தில் ஆட்சிக்கு வந்த 90 நாட்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்ற வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றாதது ஏன் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.

சென்னையில் உள்ள தமது இல்லத்தில் பேட்டியளித்த அவர்,கொடநாடு விவகாரத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

former chief minister,obs.,koda nadu,cm stalin,co-ordinator ,முன்னாள் முதல்வர், ஓபிஎஸ்., கொடநாடு, முதல்வர் ஸ்டாலின், ஒருங்கிணைப்பாளர்

தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஓ.பி.எஸ்., கூட்டத்தில் பங்கேற்க இதுவரை தங்களுக்கு அழைப்பு வரவில்லை என்றார்.

முன்னதாக, கொடநாடு விவகாரம் தொடர்பான அறிக்கை ஒன்றை ஓ.பி.எஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் வாசித்தார்.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்று அவர் வாசிக்கத் தொடங்கிய உடன் அதை நிறுத்திய ஓ. பன்னீர்செல்வம், அது வேண்டாம் என்றும் தம்மை முன்னாள் முதலமைச்சர் என்று குறிப்பிட்டால் போதும் என்றும் கூறினார்.

Tags :
|