Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லடாக்கில் முன்பிருந்த இருந்த நிலையே தொடர வேண்டும் என ஏன் இந்தியா வலியுறுத்தவில்லை? - ராகுல் காந்தி

லடாக்கில் முன்பிருந்த இருந்த நிலையே தொடர வேண்டும் என ஏன் இந்தியா வலியுறுத்தவில்லை? - ராகுல் காந்தி

By: Karunakaran Tue, 07 July 2020 3:21:07 PM

லடாக்கில் முன்பிருந்த இருந்த நிலையே தொடர வேண்டும் என ஏன் இந்தியா வலியுறுத்தவில்லை? - ராகுல் காந்தி

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15-ஆம் தேதி இந்திய-சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லை பகுதியில் போர் மூளும் பதற்றம் நிலவியது. எல்லையில் இருநாட்டு படைகளும் குவிக்கப்பட்டிருந்தன.

இருப்பினும் பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது இந்த பேச்சுவார்த்தையில் சுமூக நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி, எல்லை பகுதியில் சீனா தனது படைகளை திரும்ப பெற்றது. தற்போது இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

rahul gandhi,ladakh,calvan valley,china ,ராகுல் காந்தி, லடாக், கால்வன் பள்ளத்தாக்கு, சீனா

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருந்து சீனா தனது துருப்புக்களை திரும்பப் பெற்றது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், கால்வான் பள்ளத்தாக்கின் இறையாண்மை பற்றிய தெளிவான தகவல் இடம்பெறாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், கால்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில், முன்பிருந்த இருந்த நிலையே தொடர வேண்டும் என ஏன் இந்தியா வலியுறுத்தவில்லை? நமது மண்ணில் ஊடுருவி, ஆயுதங்களற்ற 20 இந்திய ராணுவ வீரர்களை படுகொலை செய்ததை சீனாவை, தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்? தேச நலனை காப்பது இந்திய அரசின் தலையாய கடமை என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
|