Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தயங்குவது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி

தமிழகத்தில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தயங்குவது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி

By: Monisha Thu, 05 Nov 2020 08:41:37 AM

தமிழகத்தில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தயங்குவது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி

இளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் 11 பேர் உயிரை பறித்துள்ள நிலையில் அது தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு அது தொடர்பாக முடிவு எடுக்க மேலும் கால அவகாசம் வேண்டும் என்று அ.தி.மு.க. அரசு கேட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி குடும்பத்தை நட்டாற்றில் தவிக்க விட்டு தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து அ.தி.மு.க. அரசு கவலைப்படவும் இல்லை; ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யவும் முன்வரவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

online gambling,suicide,youth,mk stalin,loss ,ஆன்லைன் சூதாட்டம்,தற்கொலை,இளைஞர்கள்,மு.க.ஸ்டாலின்,நஷ்டம்

சூதாட்டம் கொடுமையானது. சிறிய தொகையை முதலில் பரிசாக கொடுத்து ஆசை காட்டி பிறகு பெரிய தொகைக்கு நஷ்டத்தை இழப்பை ஏற்படுத்தி வாழ்க்கையை இருட்டில் தள்ளும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தடை செய்துள்ளன. தமிழகத்தில் மட்டும் இதை தடை செய்ய தயங்குவது ஏன்?. என்ன உள்நோக்கம்?

எந்திரங்களை வைத்து இளைஞர்களின் உயிரை பறிக்கும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடைசெய்து, சமூகத்தைச் சூழ்ந்துள்ள தீமையை நீக்கிட வேண்டும் எனவும், தாய்மார்களின் கண்ணீரைத் துடைத்திட முயற்சி செய்ய வேண்டும் எனவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags :
|