Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய நிலப்பகுதியை சீன படைகள் கைப்பற்றியது பற்றி பிரதமர் மவுனம் காப்பது ஏன்?-ராகுல் காந்தி

இந்திய நிலப்பகுதியை சீன படைகள் கைப்பற்றியது பற்றி பிரதமர் மவுனம் காப்பது ஏன்?-ராகுல் காந்தி

By: Karunakaran Thu, 11 June 2020 1:13:30 PM

இந்திய நிலப்பகுதியை சீன படைகள் கைப்பற்றியது பற்றி பிரதமர் மவுனம் காப்பது ஏன்?-ராகுல் காந்தி

இந்திய-சீன எல்லை பகுதி லடாக்பகுதியில் உள்ளது. சமீபத்தில் இரு நாட்டு படைகளுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. பின்னர் உயரதிகாரிகள் அங்கு வந்து மோதலை தடுத்தனர். இந்த லடாக் எல்லை பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேலும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில் இந்த லடாக் எல்லை பிரச்சினை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,சீன படைகள் லாடாக் எல்லைக்குள் புகுந்து இந்திய நிலப்பகுதியை கைப்பற்றி உள்ளனர். ஆனால் இதுபற்றி பிரதமர் மோடி எதுவும் கூறாமல் மவுனம் காப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

prime minister,indian territory,rahul gandhi,modi,chinese ,சீன படைகள்,இந்திய நிலப்பகுதி,ராகுல் காந்தி,பிரதமர் மோடி

மேலும் அவர்,ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஒட்டுமொத்த கல்வான் பள்ளத்தாக்கையும், பங்கோங் சோவின் ஒரு குறிப்பிட்ட பகுதியையும் சீனா உரிமை கோரியதாக வெளியான கட்டுரை ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அதன்பின் லடாக் பிராந்தியத்தில் இந்திய நிலப்பகுதியை சீனா எடுத்துக் கொண்டு உள்ளதா? என்பது பற்றி மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags :
|