Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க அதிபர் தேர்தல் தெளிவான நிலையை எட்டாமல் இருப்பது ஏன் ?

அமெரிக்க அதிபர் தேர்தல் தெளிவான நிலையை எட்டாமல் இருப்பது ஏன் ?

By: Karunakaran Thu, 05 Nov 2020 12:16:26 PM

அமெரிக்க அதிபர் தேர்தல் தெளிவான நிலையை எட்டாமல் இருப்பது ஏன் ?

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப்- ஜோ பைடன் இடையில் போட்டி, மிகக் கடுமையாகவே இருக்கிறது. தேர்தலுக்கு சுமார் பத்து நாட்கள் முன்புகூட, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என்று பரவலாக சொல்லப்பட்டு வந்தது. அமெரிக்க மக்களிடம், டிரம்புக்கு எதிராக கோபமான மனநிலை, வெளிப்படையாகவே தெரிந்தது. பிறகு எப்படி ‘கடுமையான போட்டி’யாக மாறியது?

நகரங்கள், படித்தவர்கள் ஆதரவு ஜனநாயக கட்சியின் ஜோ பைடனுக்கு அமோகமாக இருந்தது. இதனை மாற்றுவதற்கு டொனால்டு டிரம்ப் சிறிதளவும் முயற்சிக்கவில்லை. மாறாக, ‘உள் அமெரிக்க’ ,‘மண்ணின் மைந்தர்’களை குறிவைத்து பிரசார பாணியை கையாண்டார் டிரம்ப். கருப்பின அமெரிக்கர்களின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக ஜோ பைடன் பக்கம் போவதை உணர்ந்தார். வெள்ளை அமெரிக்கர்களின் ஆதரவை திரட்டுவதில் முனைந்தார். டிரம்ப் எதிர்பார்த்ததை போலவே, அமெரிக்க தேர்தலில் கருப்பு- வெள்ளை பேதம், பெரிதாக வெளிப்பட்டதாக தோன்றுகிறது.

us,presidential election,trump,joe biden ,அமெரிக்கா, ஜனாதிபதித் தேர்தல், டிரம்ப், ஜோ பிடென்

கொரோனா நோய் தொற்று, டிரம்புக்கு எதிராக மக்களை திருப்பியது. அதையே ‘சீன எதிர்ப்பு’ என்கிற ஆயுதத்தின் மூலம், தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டார் டிரம்ப். அமெரிக்க மக்களின் மனங்களில் சீனாவுக்கு எதிரான கோபம் ஆழமாக படிந்துவிட்டது. மொத்த மக்கள்தொகையில் இவர்கள், ஏறத்தாழ சரிபாதி இருக்கிறார்கள். கடைசி ஓட்டு எண்ணி முடிக்கப்படும் வரை, யார் வெற்றி பெறுவார் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

பொதுமக்களின் ஆதரவைத் தாண்டி, தேர்தல் குழுமம் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதில் இருக்கிறது. டொனால்டு டிரம்ப் அதிரடியாக, ‘வெற்றி அறிவிப்பு’ வெளியிட்டார். தாம் வெற்றி பெற்று விட்டதாகவும், அதற்காக அமெரிக்க மக்களுக்குத் தாம் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். அதேசமயம், பொறுமையாக இருப்போம்; நாம்தான் வெல்கிறோம் என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் ஜோ பைடன். ஒரு அதிபராக தேர்தலில் நின்று தோல்வியுற்றால் தனக்கு பெருத்த அவமானம் என்று கருதுகிறார் டிரம்ப். ஜனநாயக அரசியலில் இது இயல்பானது என்பதை புரிந்துகொள்ள மறுக்கிறார்.

Tags :
|
|