Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த சீன செயலிகளுக்கு முன்பே தடை விதிக்காதது ஏன்? - சிவசேனா

தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த சீன செயலிகளுக்கு முன்பே தடை விதிக்காதது ஏன்? - சிவசேனா

By: Karunakaran Fri, 03 July 2020 12:25:35 PM

தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த சீன செயலிகளுக்கு முன்பே தடை விதிக்காதது ஏன்? - சிவசேனா

சீனாவின் ‘டிக் டாக்’, ‘ஷேர்இட்’ உள்பட 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடைவிதித்துள்ளது. தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் இவற்றிற்கு தடை விதிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தது என்றால் சீன செயலிகளுக்கு முன்பே தடை விதிக்காதது ஏன்? என இதுகுறித்து சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் பத்திரிகையான ‘சாம்னா’ தலையங்கத்தில், இந்த செயலிகள் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்திருந்தால், இத்தனை ஆண்டுகள் எந்த தடையும் இன்றி எப்படி செயல்பட்டது. மத்திய அரசு முன்பே தடை விதிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

shiv sena,chinese apps,national security,central government ,சிவசேனா, சீன செயலிகள், தேசிய பாதுகாப்பு, மத்திய அரசு

மேலும் அதில், செயலிகள் தடை விதிக்கப்பட்டதற்கு சீனா அதிருப்தி தெரிவித்து உள்ளது. எனினும் சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கைவிட்டு செல்லவில்லை. 20 ராணுவ வீரர்கள் உயிரை தியாகம் செய்த பிறகு தான் இந்திய தகவல்கள் திருடப்படுவதை மத்திய அரசு உணர்ந்து உள்ளது. டிஜிட்டல் தாக்குதல் நடத்தி அரசு சீனாவுக்கு பதிலடி கொடுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்டாக் ஆபாசத்தை பரப்பியதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் பல டிக்டாக் பிரபலங்கள் பா.ஜனதாவில் சேர்ந்து உள்ளனர். அவர்களுக்கு இனிமேல் என்ன நடக்கும்?. சீனாவை பொருளாதார ரீதியில் தாக்க வேண்டும். செயலிகளை தடை செய்வதால் அது நடக்காது என்று சிவசேனா மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

Tags :