Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொல்பொருள் மரபுரிமையை பாதுகாக்கும் செயலணியில் தமிழர் நியமிக்கப்படாதது ஏன்?

தொல்பொருள் மரபுரிமையை பாதுகாக்கும் செயலணியில் தமிழர் நியமிக்கப்படாதது ஏன்?

By: Nagaraj Thu, 27 Aug 2020 7:59:31 PM

தொல்பொருள் மரபுரிமையை பாதுகாக்கும் செயலணியில் தமிழர் நியமிக்கப்படாதது ஏன்?

தமிழர் நியமிக்கப்படாதது ஏன்?... கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமையை பாதுகாக்கும் செயலணியில் தமிழர் ஒருவர் கூட ஏன் நியமிக்கப்பவில்லை என நான் ஜனாதிபதியிடம் கேட்க விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்பாக கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமையை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டது.

12 பேர் அங்கம் வகிக்கும் அந்த செயலணியில் தமிழர் ஒருவர்கூட உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. அதனையடுத்து, அதற்கு தமிழர் தரப்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. அத்துடன், குறித்த செயலணியில் தமிழர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டது.

tamil,history,culture,identities,in the future ,தமிழர், வரலாறு, கலாச்சாரம், அடையாளங்கள், எதிர்காலத்தில்

இந்த நிலையில், கடந்த பொதுத்தேர்தலின் பின்னர், அந்த செயலணியின் உறுப்பினர்களாக மேலும் நால்வர் உள்வாங்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களிலும் தமிழர்கள் ஒருவர்கூட உள்வாங்கப்படவில்லை. கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமையை பாதுகாக்கும் செயலணியில் தமிழர் ஒருவர்கூட ஏன் நியமிக்கப்பவில்லை என நான் ஜனாதிபதியிடம் கேட்க விரும்புகிறேன்.

கிழக்கு மாகாணத்தின் மரபுரிமைகளை பாதுகாக்க பௌத்த மதகுருமார் அடங்கிய செயலணி உருவாக்கப்பட்டது, தமிழர்களுடைய வரலாறு, கலாச்சார அடையாளங்கள் என்பன அழிக்கப்பட்டு எதிர்காலத்தில் பௌத்த சிங்கள மயமாக்கலை ஏற்படுத்தவா என கேட்க விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|