Advertisement

சிலிண்டர் விலை அதிகரிப்பு ஏன்? மக்களவையில் கேள்வி

By: vaithegi Thu, 09 Feb 2023 5:53:17 PM

சிலிண்டர் விலை அதிகரிப்பு ஏன்? மக்களவையில் கேள்வி

இந்தியா: இந்தியாவில் கடந்த 2 வருடங்களாகவே எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இன்றைக்கு சிலிண்டர் பயன்படுத்தாத வீடுகளே இருக்க முடியாது. அந்த அளவிற்கு மக்கள் அனைவரும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாறி விட்டனர்.

இந்நிலையில் இதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது சாமானிய மக்களுக்கு பொருளாதார ரீதியாக பிரச்சனையை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.இந்தியாவை பொறுத்தவரை கச்சா எண்ணெயின் சந்தை விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை நிர்ணயித்து கொண்டு வருகிறது.

gas,people ,எரிவாயு,மக்களவை

எனவே அதன்படி சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை ஏறும் போது இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையும் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதையடுத்து இந்த சிலிண்டர் விலை குறித்து இன்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய பெட்ரோலிய அமைச்சர், சர்வதேச எரிபொருட்களின் விலை மெட்ரிக் டன்னுக்கு 750 அமெரிக்க டாலர் குறைந்தால் உள்நாட்டு சிலிண்டரின் விலையை குறைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

Tags :
|