Advertisement

சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை

By: vaithegi Thu, 21 Sept 2023 10:28:11 AM

சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை

சென்னை: மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

rainy,chennai ,மழை ,சென்னை

இந்த நிலையில் சென்னை மெரினா, எம்.ஆர்.சி. நகர், அடையாறு, திருவான்மியூர், கோயம்பேடு, நெற்குன்றம், முகப்பேர், வடபழனி, கோடம்பாக்கம்,

மேலும் நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து கொண்டு வருகிறது. சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது.

Tags :
|