Advertisement

சென்னையில் பல இடங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை

By: vaithegi Mon, 08 Aug 2022 07:40:08 AM

சென்னையில்  பல இடங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 11-ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இந்த நிலையில், சென்னையில் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து கொண்டு வருகிறது.

rainy,chennai,early morning ,மழை ,சென்னை,அதிகாலை

மேலும் கிண்டி, ஈக்காட்டுதாங்கல்,வேளச்சேரி உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது.

இதனால், காலை அலுவலகம் செல்வோரும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமமடைந்துள்ளனர். இருந்தாலும் அதேவேளை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது.

Tags :
|