Advertisement

குப்பைகளிலிருந்து உணவை உட்கொள்ளும் காட்டுயானைகள்

By: Nagaraj Sun, 04 Oct 2020 11:11:19 AM

குப்பைகளிலிருந்து உணவை உட்கொள்ளும் காட்டுயானைகள்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கொட்டப்படும் குப்பைகளில் இருந்து உணவினை உட்கொள்ளும் காட்டு யானைகள் தொடர்பில் சர்வதேச ஊடகங்களின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த குப்பை உணவுகளை உட்கொள்ளும் காட்டு யானைகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையும் உள்ளது.

அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில் கொட்டப்படும் குப்பைகளை உணவாக பெறும் யானைகளின் புகைப்படங்களை யாழ்ப்பாணத்தை சேர்ந்த புகைப்பட கலைஞரான தர்மபாலன் திலக்ஷன் என்பவரினால் எடுக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை, கல்முனை, காரைத்தீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கறைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களின் குப்பைகள் இந்த இடத்திலேயே கொட்டப்படுகின்றன.

elephants,garbage,ecologists,animals ,யானைகள், குப்பைகள், சுற்றுச்சூழலியாளர்கள், விலங்குகள்

இது காட்டிற்கு அருகில் உள்ள பகுதி என்பதனால் யானைகள் உட்பட மிருகங்கள் உணவு தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இது மிகவும் வருத்தமளிக்கும் நிலைமை எனவும், விலங்குகளின் உயிருக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என தில்க்ஷன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குப்பைகளில் பொலித்தீன், லன்ச் சீட், போன்ற உக்காத பொருட்கள் உள்ளதாகவும், காட்டு யானைகள் உட்பட விலங்குகள் இதனை உட்கொண்டு உயிரிழப்பதாக சுற்றுச் சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் உயிரிழந்த பல யானைகளின் வயிற்றில் உக்காத பொலித்தீன் உட்பட குப்பைகள் பாரியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags :