Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குன்னூரில் காட்டு யானைகள் அட்டகாசம்; மேரக்காய் கொடிகள் சேதம்

குன்னூரில் காட்டு யானைகள் அட்டகாசம்; மேரக்காய் கொடிகள் சேதம்

By: Monisha Thu, 17 Dec 2020 2:55:50 PM

குன்னூரில் காட்டு யானைகள் அட்டகாசம்; மேரக்காய் கொடிகள்  சேதம்

கடந்த வாரத்தில் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் செடிகள் வளர்ந்து பச்சை பசேலென காட்சியளிக்கிறது. இதனால் உணவு தேடி காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள கோடேரி பகுதியில் ஐந்து காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. அவற்றை வனத்துறையினர் துரத்தினர்.

பின்னர் குன்னூர் அருகேயுள்ள கிளிஞ்சடா பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியே வந்த காட்டு யானைகள் முகாமிட்டன. இந்த பகுதியில் வசித்து வரும் விவசாயிகள் மேரக்காய் உள்பட பல்வேறு காய்கறிகளை சாகுபடி செய்துள்ளனர்.

wildlife,wild elephant,food,pumpkins,damage ,வனப்பகுதி,காட்டு யானை,உணவு,மேரக்காய்,சேதம்

மேலும் இந்த பயிருக்கு பந்தல் அமைக்க வேண்டும் என்பதால் விவசாயிகள் அதிகளவு பணம் செலவு செய்து பந்தல் அமைத்திருந்தனர். இந்நிலையில் கிளிஞ்சடா பகுதியில் புகுந்த ஐந்து காட்டுயானைகள் அறுவடைக்கு தயாராக இருந்த மேரக்காய்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுட்டதுடன் அங்குள்ள பந்தல்களையும் நாசம் செய்தன.

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். அதில் மூன்று விவசாயிகளின் தோட்டத்தில் மேரக்காய்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags :
|