Advertisement

தெற்கு கலிபோர்னியாவில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ

By: Nagaraj Mon, 03 Aug 2020 8:56:04 PM

தெற்கு கலிபோர்னியாவில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ

வேகமாக பரவி வரும் காட்டுத்தீ... தெற்கு கலிபோர்னியாவின் ரிவர்சைடு கவுண்டியில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயால், சுமார் 8,000 உள்ளூர்வாசிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய “ஆப்பிள் ஃபயர்” என அழைக்கப்படும் இந்த தீ, சுமார் 20,516 ஏக்கர் (83.1 சதுர கி.மீ) பரப்பளவிற்கு பரவியுள்ளது என்று கலிபோர்னியா வனத்துறை மற்றும் தீ பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது .

மொத்தம் 1,360 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். ஆனால் இதுவரை தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது என கூறப்படுகிறது.

california,wildfires,air tankers,homes ,கலிபோர்னியா, காட்டுத் தீ, ஏர் டேங்கர்கள், வீடுகள்

"ஆப்பிள் தீ" முதலில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலிருந்து 110 கி.மீ தொலைவில் உள்ள செர்ரி பள்ளத்தாக்குக்கு அருகே இரண்டு சிறிய தீபொறியாக ஆரம்பித்து பின்னர் மிக வேகமாக பரவியது. குறைந்த ஈரப்பதம் மற்றும் கடுமையான காற்றுடன் வெப்பமான மற்றும் வறண்ட சூழ்நிலைகளால் இந்த தீ வேகமாகப் பரவியதாக கண்டறியப்பட்டுள்ளது.

2,500 வீடுகளை அச்சுறுத்தும் இந்த தீ’க்கு எதிராக ஆறு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆறு ஏர் டேங்கர்கள் தீயை முழுதாக அணைக்கும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளன என்று உள்ளூர் என்.பி.சி செய்தி சேனல் தெரிவித்துள்ளது.

Tags :