Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா பப்ஜி; பேச்சுவார்த்தை நடக்கிறது

இந்தியாவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா பப்ஜி; பேச்சுவார்த்தை நடக்கிறது

By: Nagaraj Thu, 10 Sept 2020 09:18:52 AM

இந்தியாவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா பப்ஜி; பேச்சுவார்த்தை நடக்கிறது

மீண்டும் பயன்பாட்டு வருமா பப்ஜி... சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து இந்திய நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக பப்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. சீனா உடனான எல்லைப் பிரச்சனையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பப்ஜி விளையாட்டின் தாய் நிறுவனமான தென் கொரியாவைச் சேர்ந்த பப்ஜி கார்பரேசன் இந்தியாவில் பப்ஜி விளையாட்டை விநியோகிக்க சீன நிறுவனமான டென்சென்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தத்தை செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.

license agreement,indian company,babji,negotiation,application ,உரிம ஒப்பந்தம், இந்திய நிறுவனம், பப்ஜி, பேச்சுவார்த்தை, பயன்பாடு

அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைளை மதிப்பதாக தெரிவித்துள்ள பப்ஜி நிறுவனம் இந்தியாவில் மீண்டும் பப்ஜி விளையாட்டு செயலியை பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. சட்ட வரைமுறைகளுக்குள்பட்டு இந்தியாவில் செயலியை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உள்ளதாக பப்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஒரு புதிய உரிம ஒப்பந்தத்தின் அடிப்படையில் பப்ஜி நிறுவனம் இந்திய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தம் உறுதியாகும் நிலையில் பப்ஜி விளையாட்டு இந்தியாவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|