Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜனநாயகத்திற்கு விசுவாசமாக இருப்பேன்... முதல் பெண் பிரதமர் ஜார்ஜியா உறுதி

ஜனநாயகத்திற்கு விசுவாசமாக இருப்பேன்... முதல் பெண் பிரதமர் ஜார்ஜியா உறுதி

By: Nagaraj Sun, 23 Oct 2022 08:47:31 AM

ஜனநாயகத்திற்கு விசுவாசமாக இருப்பேன்... முதல் பெண் பிரதமர் ஜார்ஜியா உறுதி

இத்தாலி: இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி இன்று பதவியேற்றார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியில் அமையும் தீவிர வலதுசாரி அரசாங்கம் இதுவாகும். இந்நிலையில், ஜனநாயகத்திற்கு விசுவாசமாக இருப்பேன் என்று சத்தியம் செய்கிறேன் என்று பிரதமர் ஜார்ஜியா மெலோனி உறுதியளித்தார்.

முன்னதாக, இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த 2021ஆம் ஆண்டு மரியோ டிராகி (Mario Draghi)பிரதமரானார். அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கூட்டணி கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக்கொண்டனர்.

first female prime minister,maloney,commitment,democracy,european union ,
முதல் பெண் பிரதமர், மெலோனி, உறுதி, ஜனநாயகம், ஐரோப்பிய யூனியன்

இதன் காரணமாக, பெரும்பான்மை இல்லாததால் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி கடந்த ஜூலை மாதம் தன் பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து, இத்தாலி நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இந்த தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜார்ஜியா மெலோனி வெற்றி பெற்றார்.

45 வயதான ஜார்ஜியா மெலோனி கடவுள், தேசபக்திமிக்க நாடு மற்றும் குடும்பம் என்ற பழமையான பாசிச முழக்கத்தை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தினார். ஜார்ஜியா மெலோனி ஒரு தீவிர தேசியவாதியாகவும், ஐரோப்பிய எதிர்ப்பு ஒற்றுமை தலைவராகவும் கருதப்படுகிறார். அகதிகள் பிரச்சனைக்கு ஐரோப்பிய ஒன்றியமே காரணம் என மெலோனி கருதுகிறார்.

மெலோனி இத்தாலியின் பிரதமரானால், அவர் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறலாம் என்ற அச்சம் நிலவுகிறது. உக்ரைன் போரில் உக்ரைனுக்கு இத்தாலி வலுவாக ஆதரவளித்து வருகிறது. அடுத்த அரசாங்கத்தின் கீழ் அது அப்படியே இருக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, மெலோனி உக்ரைனுக்கு தனது இராணுவ உதவி கொள்கையை தொடர உறுதியளித்துள்ளார்.

Tags :