Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர புடினுடன் சீன அதிபர் விவாதிப்பாரா?

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர புடினுடன் சீன அதிபர் விவாதிப்பாரா?

By: Nagaraj Tue, 21 Mar 2023 10:50:47 AM

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர புடினுடன் சீன அதிபர் விவாதிப்பாரா?

மாஸ்கோ: உக்ரைனில் நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து புதினுடன் ஜி ஜின்பிங் விவாதிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஓராண்டுக்கு பிறகும் ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் முடிவுக்கு வராமல் இழுபறியாக உள்ளது. இந்த யுத்தம் அந்த இரு நாடுகளை மட்டுமின்றி உலக நாடுகளையும் பாதிக்கிறது. எனவே, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர உலகின் பல நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்காவும், பல்வேறு மேற்கத்திய நாடுகளும் பெருமளவில் ஆதரவு அளித்து வருவதுடன், ரஷ்யாவுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான சீனா, போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவுக்கு எதிராக பேசவில்லை. மாறாக, ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கத்திய நாடுகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இதனால், போரில் ரஷ்யாவுக்கு சீனா ஆதரவு அளித்து வருவதாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் சீனா அதை திட்டவட்டமாக மறுக்கிறது. இந்நிலையில், உக்ரைன் போர் குறித்த தனது நிலைப்பாட்டை சமீபத்தில் வெளியிட்ட சீனா, போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமைதி திட்டத்தை அறிவித்தது.

moscow,russia,ukraine,war, ,உக்ரைன், போர், மாஸ்கோ, ரஷ்யா

சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாள் பயணமாக நேற்று ரஷ்யா சென்றார். சீன அதிபராக தொடர்ந்து 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜி ஜின்பிங்கின் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். விமானம் மூலம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ வந்தடைந்த ஜி ஜின்பிங்கிற்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த பயணத்தின் போது, ரஷ்ய அதிபர் புதினுடன் ஜி ஜின்பிங் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்நிலையில், உக்ரைனில் நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து புதினுடன் ஜி ஜின்பிங் விவாதிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்ய பயணத்திற்கு முன் ரஷ்ய பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், தனது ரஷ்யாவிற்கு வருகை உக்ரைன் போர் பற்றிய கவலைகளை தீர்க்கும் என்று ஜி ஜின்பிங் உறுதியளித்தார். இந்த விஜயத்தின் மூலம் ரஷ்யாவுடனான சீனாவின் நட்பு மேலும் வலுப்பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags :
|
|
|