Advertisement

மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா?

By: vaithegi Sun, 26 Mar 2023 3:37:37 PM

மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா?

சென்னை: தமிழகத்தில் கடந்த மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிகை 10க்கும் குறைவாக மட்டுமே பதிவாகி வந்தது.

இந்நிலையில், இந்த மாத ஆரம்பத்தில் 16 என தொடங்கி தற்போது 100 என மூன்று இலக்கியத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகிறது. எனவே அதன்படி தற்போது தமிழகத்தில் மொத்தமாக 582 பேர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

இதில் சென்னையில் 128 பேரும், கோவையில் 131 பேரும், செங்கல்பட்டில் 69 பேரும் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

restrictions,lockdown ,கட்டுப்பாடுகள் ,ஊரடங்கு

இதனை அடுத்து இவ்வாறு அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், பொதுமக்கள் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமோ? என்ற பெரும் அச்சத்தில் உள்ளனர். ஆனால், கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் தடுப்பூசி செலுத்தியதால் தற்போது உயிரிழப்புகள் கணிசமாக குறைந்துள்ளது.

அதனால் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தும் அளவுக்கு பாதிப்பு ஏற்படாது என மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags :