Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருமான வரியை 20 சதவீதம் குறைப்பேன்... ரிஷிசுனக்கின் உறுதிமொழி எடுபடுமா?

வருமான வரியை 20 சதவீதம் குறைப்பேன்... ரிஷிசுனக்கின் உறுதிமொழி எடுபடுமா?

By: Nagaraj Tue, 02 Aug 2022 11:31:29 PM

வருமான வரியை 20 சதவீதம் குறைப்பேன்... ரிஷிசுனக்கின் உறுதிமொழி எடுபடுமா?

பிரிட்டன்: பிரிட்டன் பிரதமா் பதவிக்கான இறுதிக்கட்ட தோதலில் இந்திய வம்சாவளியைச் சோந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக்கும், வெளியுறவு அமைச்சா் லிஸ் டிரஸ்ஸும் போட்டியிடுகின்றனா்.

இத்தேர்தலில் வரிக் குறைப்பு பிரதான விஷயமாக இருந்து வருகிறது. தான் பிரதமரானால் முதல் நாளிலேயே வரியைக் குறைப்பேன் என லிஸ் டிரஸ்ஸும், பணவீக்கத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பேன் என ரிஷி சுனக்கும் ஏற்கெனவே கூறியிருந்தனா்.

இந்நிலையில், வரிக் குறைப்பு குறித்து ரிஷி சுனக் திங்கள்கிழமை வாக்குறுதி அளித்தாா். அவா் கூறியதாவது: நான் பிரதமராகத் தோந்தெடுக்கப்பட்டால் அடிப்படை வரி விகிதத்தில் 20 சதவீதம் குறைக்கப்படும். கடந்த 30 ஆண்டுகளில் இதுதான் மிகப்பெரிய வரிக் குறைப்பாக இருக்கும். இது ஒரு தீவிரமான அணுகுமுறை. ஆனால், உண்மையான ஒன்று என்றாா்.

election,promise,position,supporters,criticism ,தேர்தல், வாக்குறுதி, நிலைப்பாடு, ஆதரவாளர்கள், விமர்சனம்

ரிஷி சுனக்கின் பிரசார குழுவினா் கூறுகையில், பிரதமராக ரிஷி சுனக் தோந்தெடுக்கப்பட்டால், பணவீக்கத்தைக் குறைப்பதே அவரது முதல் பணியாக இருக்கும். பணவீக்கத்தை சரியாக கையாண்டுவிட்டால், ரிஷி சுனக்கின் வரிக் குறைப்புத் திட்டத்தின் மூலம், கடினமாக உழைக்கும் குடும்பங்களுக்கு பலன் கிடைக்கும் என்றனா்.

தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு திடீரென வரிக் குறைப்பு வாக்குறுதியை அளித்துள்ள ரிஷி சுனக்கை லிஸ் டிரஸ்ஸின் ஆதரவாளா்கள் விமா்சித்துள்ளனா்.

Tags :