Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் வழக்கு மறு விசாரணைக்கு உட்படுத்தப்படுமா?

டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் வழக்கு மறு விசாரணைக்கு உட்படுத்தப்படுமா?

By: Nagaraj Mon, 05 June 2023 5:58:39 PM

டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் வழக்கு மறு விசாரணைக்கு உட்படுத்தப்படுமா?

நாமக்கல்: டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் மர்மமான உயிரிழப்பு தொடர்பான வழக்கு மறு விசாரணைக்கு உட்படுத்தப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கோகுல் ராஜ் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்குகளுக்கான தீர்ப்பு வெளியாகிவிட்டது. கொலை வழக்கை விசாரித்து வந்த நாமக்கல் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கோகுல்ராஜ் வழக்கு முடங்கிபோனது. இந்நிலையில் கோகுல் ராஜ் வழக்கில் இறுதித் தீர்ப்பு வந்திருப்பதை தொடர்ந்து டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் மர்மான உயிரிழப்பு தொடர்பான வழக்கு மறு விசாரணைக்கு உட்படுத்தப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் டி.எஸ்.பியாக பணியாற்றி வந்தவர், விஷ்ணுபிரியா. கோகுல்ராஜ் கொலை வழக்கை தொடர்ந்து விசாரணை செய்து வந்தார். இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக நாமக்கல் வந்தவர், தன்னுடைய முகாம் அலுவலகத்திலேயே மதியம் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

டிஎஸ்பி விஷ்ணுபிரியா 18.9.2015-ல் திருச்செங்கோடு காவலர் குடியிருப்பில் உள்ள தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து, விஷ்ணுபிரியா தற்கொலைதான் செய்துள்ளார், அதற்கு யாருடைய தூண்டுதலும் காரணமாக இல்லை என்று கூறி வழக்கை முடிப்பதாகத் தெரிவித்தது.

வழக்கு விசாரணையில் இருந்தபோது, தற்போது கோகுல் ராஜ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள யுவராஜ், அப்போது தலைமறைவாக இருந்தார். சந்தேகத்தின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் அவரை தேடி வந்தார்கள். இந்நிலையில் விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு தன்னிடம் செல்போனில் பேசியதாகவும், அது குறித்து முக்கியமான ஆதாரத்தை வெளியிடப் போவதாகவும் வாட்ஸ் அப் ஆடியோ அனுப்பியிருந்தார்.

dsp vishnu priya,suicide,investigation,cause,cbi ,டிஎஸ்பி விஷ்ணு பிரியா, தற்கொலை, விசாரணை, காரணம், சிபிஐ

கோகுல் ராஜ் கொலை வழக்கில் அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டாலும் முக்கியமான குற்றவாளியான யுவராஜ் கைது செய்யப்படவில்லை. ஏன் கைது செய்யப்படவில்லை என்று துறை ரீதியாக அழுத்தமும், இன்னொரு பக்கம் யுவராஜை கைது செய்தால் விபரீதங்கள் நடைபெறும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் பல்வேறு செய்திகள் வெளியாகியிருந்தன. யுவராஜ், டி.எஸ்.பியின் செல்போனுக்கு பலமுறை தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

விஷ்ணுபிரியாவின் மரணத்தில் மர்மம் இல்லை. மன உளைச்சலின் காரணமாகத்தான் தற்கொலைக்கு தூண்டப்பட்டார் என்றும் கூறப்பட்ட நிலையில் சி.பி.ஐ விசாரணை ஆரம்பமானது. சிபிஐ விசாரணையின் முடிவில் டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் மரணம் தற்கொலை என்று அறிவிக்கப்பட்டது. அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

யாராவது தற்கொலைக்கு தூண்டினார்களா, விஷ்ணுபிரியா இறுதியாக எழுதிய கடிதத்தில் இருந்தவை பற்றிய விபரங்களும் தெரியவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags :
|