Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜார்ஜ் பிளாய்ட் கருப்பின மனிதனுக்கு நீதி வழங்கப்படும் - டொனால்டு டிரம்ப்

ஜார்ஜ் பிளாய்ட் கருப்பின மனிதனுக்கு நீதி வழங்கப்படும் - டொனால்டு டிரம்ப்

By: Monisha Tue, 02 June 2020 09:50:36 AM

ஜார்ஜ் பிளாய்ட் கருப்பின மனிதனுக்கு நீதி வழங்கப்படும் - டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவின் மினியாபொலிசில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவர் போலீஸ் அதிகாரிகளின் பிடியில் கடந்த வாரம் கொல்லப்பட்டார். இந்த சம்பவம், கருப்பர் இன மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து 6-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டக்காரர்களுக்கும், கலவர தடுப்பு போலீசாருக்கும் இடையே நியுயார்க், சிகாகோ, பிலடெல்பியா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் மோதல்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்களை போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளையும், ரப்பர் தோட்டாக்களையும் வெடித்து விரட்டியடித்தனர். 40 நகரங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியே கூடி வந்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

donald trump,george floyd,black man,struggle ,டொனால்டு டிரம்ப்,ஜார்ஜ் பிளாய்ட்,கருப்பின மனிதன்,போராட்டம்

இந்த நிலையில் போராட்டக்காரர்கள் வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்தபோவதாக எச்சரித்து உள்ளார். இது குறித்து டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-

ஜார்ஜ் பிளாய்ட் கருப்பின மனிதனுக்கு நீதி வழங்கப்படும். ஜனாதிபதியாக எனது முதல் மற்றும் மிக உயர்ந்த கடமை நமது பெரிய நாட்டையும் அமெரிக்க மக்களையும் பாதுகாப்பதாகும். நமது தேசத்தின் சட்டங்களை நிலைநிறுத்துவதாக நான் சத்தியம் செய்து உள்ளேன். அதைத்தான் நான் செய்வேன்.

ஒரு நகரம் அல்லது மாநில நிர்வாகம் தங்கள் மக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மறுத்தால், நான் அமெரிக்க இராணுவத்தை கொண்டு வருவேன். பிரச்சினையை விரைவாக தீர்ப்பேன் என கூறினார்.

Tags :