Advertisement

ட்விட்டரை வாங்குவாரா? மாட்டாரா? நிபுணர்கள் கணிப்பு

By: Nagaraj Fri, 08 July 2022 4:09:12 PM

ட்விட்டரை வாங்குவாரா? மாட்டாரா? நிபுணர்கள் கணிப்பு

அமெரிக்கா: ட்விட்டர் ஒப்பந்தம் குறித்த எலான் மஸ்க்கின் நிலைப்பாடு உறுதியாகத் தெரியாத நிலையில், அவர் ஒப்பந்தத்தைக் கைவிடுவது குறித்து சிந்தித்து வருவதாக பிரபல அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக ஊடகமான ட்விட்டரை 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி ஆகும். இந்த நிலையில் ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த முழுமையான விவரங்களைத் தராவிட்டால் ஒப்பந்தத்தில் இருந்து விலக நேரிடும் எனவும் எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

ட்விட்டர் ஒப்பந்தம் குறித்த எலான் மஸ்க்கின் நிலைப்பாடு உறுதியாகத் தெரியாத நிலையில், அவர் ஒப்பந்தத்தைக் கைவிடுவது குறித்து சிந்தித்து வருவதாக பிரபல அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பங்குச்சந்தையில் ட்விட்டர் நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

experts,contract,twitter,elanmusk,predicted ,
நிபுணர்கள், ஒப்பந்தம், ட்விட்டர், எலான்மஸ்க், கணித்துள்ளனர்

எலான் மஸ்க் வாங்கிய விலையை விட அந்நிறுவனப் பங்குகள் 4% சரிவைச் சந்தித்துள்ளன. வரவிருக்கும் வாரங்களில் ட்விட்டர் ஒப்பந்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டை எலான் மஸ்க் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் நிர்வாகிகள் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான கணக்குகள் போலியானவை என உறுதியாகக் கூறியுள்ளனர். ஆனால் எலான் மஸ்க் போலிக்கணக்குகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என நம்புவதாகக் கூறினார். பேச்சுவார்த்தை நடத்தியபடி மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

எலான் மஸ்க் ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தில் இருந்து 60% விலைக்கே ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்புள்ளதாகவும் அல்லது ஒரு பில்லியன் டாலர் கட்டணம் செலுத்தி விட்டு ஒப்பந்தத்தை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Tags :