Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடன் விழாவில் மன்மோகன் சிங் கலந்து கொள்ளவுள்ளாரா ?

அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடன் விழாவில் மன்மோகன் சிங் கலந்து கொள்ளவுள்ளாரா ?

By: Karunakaran Wed, 11 Nov 2020 12:05:31 PM

அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடன் விழாவில் மன்மோகன் சிங் கலந்து கொள்ளவுள்ளாரா ?

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20, 2021 ஆம் தேதி பதவியேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கொரோனா வைரஸ் காலக்கட்டத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறின.

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் மன்மோகன் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாக வைரல் பதிவுகளில் கூறப்பட்டு இருக்கிறது.

manmohan singh,inauguration,us president,joe biden ,மன்மோகன் சிங், பதவியேற்பு, அமெரிக்க அதிபர் ஜோ பிடன்

இந்த வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் மன்மோகன் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் மன்மோகன் சிங் அலுவலகம் சார்பில் வைரல் தகவலில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் மன்மோகன் சிங் கலந்து கொள்வதாக கூறி வைரலான தகவலில் துளியும் உண்மையில்லை என்பது தெளிவாகிவிட்டது. போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்படலாம். எனவே போலி செய்திகளை பரப்பாதீர்கள்.

Tags :