Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீன அதிபரை சந்திப்பேன்... ஆனால் ரஷ்யாவுடன் சமரச பேச்சுக்கு தயாரில்லை

சீன அதிபரை சந்திப்பேன்... ஆனால் ரஷ்யாவுடன் சமரச பேச்சுக்கு தயாரில்லை

By: Nagaraj Sat, 25 Feb 2023 7:29:14 PM

சீன அதிபரை சந்திப்பேன்... ஆனால் ரஷ்யாவுடன் சமரச பேச்சுக்கு தயாரில்லை

உக்ரைன்: சீன அதிபர் ஜி ஜின்பிங்கை விரைவில் நான் சந்தித்துப் பேசுவேன். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுக்கும் தயாரில்லை என உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் இடையே அமைதிப் பேச்சு தொடங்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்திருந்த நிலையில் அவரை சந்திக்க உக்ரைன் அதிபர் செல்ல உள்ளார்.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் ஆரம்பித்து ஓராண்டு கடந்துள்ளது. ஆனால் இருதரப்பும் அமைதிப்பேச்சை தொடங்கவில்லை.

chinese president,president,reconciliation,russia, ,அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சமரசப் பேச்சு, ரஷ்ய அதிபர்

இதில் உக்ரைன் பக்கம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ள நிலையில், கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின் பக்கம், சீனா தொடர்ந்து நிற்கிறது. ரஷ்யாவுக்கு எதிராக இதுவரை ஐ.நா.வில் கொண்டு வந்த எந்தத் தீர்மானத்தையும் சீனா ஆதரிக்கவில்லை. அதேசமயம், ரஷ்யாவின் போர் நடவடிக்கையையும் சீனா கண்டிக்கவில்லை.

ஆனால், உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் முடிவுக்குவர வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் “ நான் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை விரைவில் சந்தித்துப் பேசுவேன்.

ஆனால், ரஷ்ய அதிபருடன் எந்தவிதமான சமரசப் பேச்சுக்கும் தயாராக இல்லை. இந்த விவகாரத்தில் சீனா பங்கேற்றுள்ளது, முக்கியமான சமிக்கையாகத் தெரிகிறது. இருதரப்புக்கும் அமைதியைக் கொண்டுவர சீனா விரும்புகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
|