Advertisement

“மோக்கா” புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு வருமா?

By: vaithegi Thu, 11 May 2023 1:22:40 PM

“மோக்கா” புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு வருமா?

சென்னை: புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் வராது .... இந்தியாவில் கடந்த நாட்களாகவே பல மாநிலங்களில் மழை பெய்து கொண்டு வருகிறது. தென் கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தான் அதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை 5.30 மணியளவில் புயலாக வலுப்பெற்று இருக்கிறது.

இதையடுத்து அந்த புயலுக்கு மோக்கா என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த புயல் போர்ட் பிளேயருக்கு மேற்கு-தென்மேற்கே சுமார் 510 கி.மீ காக்ஸ் பஜாரின்(வங்காளதேசம்) தென்-தென்மேற்கே 1,210 கி.மீ மற்றும் சிட்வே(மியான்மர்) க்கு தென்-தென்மேற்கில் 1120 கி.மீ தொலைவில் நிலை கொண்டுவுள்ளது.

storm,mocha ,புயல் ,மோக்கா

மேலும் இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக தீவிரமடைந்து இன்று நள்ளிரவில் தீவிர புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் அது படிப்படியாக நாளை காலை முதல் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக் கடலில் வருகிற மே 12 மாலையில் அதி தீவிர புயலாக புயலாக மேலும் வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த எனவும், ஆனால் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் வெப்ப நிலை அதிகரிப்பும் ஏற்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|