Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோர மாட்டேன் - பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாக மறுப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோர மாட்டேன் - பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாக மறுப்பு

By: Karunakaran Mon, 24 Aug 2020 5:58:12 PM

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோர மாட்டேன் - பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாக மறுப்பு

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பாப்டே, ஹார்லி டேவிட்சன் ஹெல்மெட் அணியாமல் பைக் மீது அமர்ந்திருந்த புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த புகைப்படம் குறித்து, சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய 4 தலைமை நீதிபதிகள் குறித்தும் சமூக செயல்பாட்டாளரும் மற்றும் மூத்த வக்கீலுமான பிரசாந்த் பூஷண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை வெளியிட்டார்.

இந்நிலையில் இது கோர்ட்டை அவமதிக்கும் செயல் எனக்கூறி அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இதுபோன்று பிரசாந்த் பூஷண் பல எதிர்மறையான கருத்துக்களை கூறி வருவதாக பலரும் குற்றம் சாட்டி வந்தனர்.

apologize,contempt of court case,prashant bhushan,high court ,மன்னிப்பு, நீதிமன்ற வழக்கை அவமதித்தல், பிரசாந்த் பூஷண், உயர் நீதிமன்றம்

இந்நிலையில், தலைமை நீதிபதி பாப்டே குறித்து வெளியிட்ட கருத்துக்கு பூஷண் வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் முன்னாள் நீதிபதிகள் குறித்த கருத்துக்கு அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை. இந்த அவமதிப்பு வழக்கில் அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு, பிரசாந்த் பூஷண் குற்றவாளி என தீர்ப்பளித்தது.

இன்றுடன் 3 நாள் அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில், ஷண் தனது விமர்சனங்களுக்கு மன்னிப்புக் கோரப் போவதில்லை என தெரிவித்துள்ளார். மேலும் அவர், நீதிமன்றத்தில் என்னுடைய விமர்சனத்திற்கு நான் மன்னிப்புக் கோருவது என்பது உண்மையற்றதாக இருக்கும். அப்படிக் கோருவது நான் மிகுந்த மதிப்பிற்குரிய ஒரு நிறுவனத்தை அவமதிப்பதாக இருக்கும் என்று கூறினார்.

Tags :