Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜோ பைடனுடன் காணொலி காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை - அதிபர் டொனால்டு டிரம்ப்

ஜோ பைடனுடன் காணொலி காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை - அதிபர் டொனால்டு டிரம்ப்

By: Karunakaran Fri, 09 Oct 2020 2:36:43 PM

ஜோ பைடனுடன் காணொலி காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை - அதிபர் டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபர் டெனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையேயான முதல் நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த மாதம் 29-ம் தேதி ஓஹியோ மாகாணத்தில் நடைபெற்றது.

இந்த விவாத நிகழ்ச்சி நடைபெற்று சில நாட்களில் அதிபர் டொனால்டு டிரம்பிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டிரம்ப், தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டத்தையடுத்து வெள்ளைமாளிகையில் தனது பணிகளை தொடர்ந்து வருகிறார். ஆனால், அவர் இன்னும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடையவில்லை.

video conference,debate,joe biden,donald trump ,வீடியோ மாநாடு, விவாதம், ஜோ பிடன், டொனால்ட் டிரம்ப்

அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான 2-வது நேரடி விவாத நிகழ்ச்சி புளோரிடா மாகாணத்தில் நடந்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அதிபர் வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் பைடன் இடையே வரும் 15-ம் தேதி நடைபெற உள்ள நேரடி விவாத நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் நடைபெறும் என அதிபர் தேர்தலுக்கான விவாத ஒருங்கிணைப்பு கமிஷன் நேற்று தெரிவித்தது.

இந்நிலையில் இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றின் கேள்விக்கு பதிலளித்த அதிபர் டிரம்ப், காணொலி காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று எனது நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. நேரடி விவாதம் என்பது காணொலி காட்சி மூலம் நடத்தப்படுவதல்ல என தெரிவித்தார். இதற்கு முன், டொனால்டு டிரம்ப் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடையவில்லை என்றால் அவருடன் நேரடி விவாத்தில் ஈடுபடமாட்டேன் என்று ஜோ பைடன் ஏற்கனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|