Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்படுமா?

இன்று மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்படுமா?

By: Nagaraj Thu, 23 Mar 2023 10:59:37 AM

இன்று மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்படுமா?

சென்னை: மீண்டும் தாக்கல் செய்யப்படுமா?... ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநரிடமிருந்து திருப்பி அனுப்ப்பட்ட தினத்தன்றே மறுபடியும் சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இன்று சட்டசபையில் மீண்டும் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

சென்ற வாரம் கூடிய தமிழக அரசின் அமைச்சரவை கூட்டத்தில், ஆளுநரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்தும் விவாதிக்கப்பட்டது. சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆளுநர் எழுப்பிய கேள்விகளோடு, இன்னும் சட்டச் சிக்கல்கள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு ஆலோசனை வேண்டி தமிழக அரசு சட்ட வல்லுநர்களை நாடியிருப்பதாக கோட்டை வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அளித்துள்ள பரிந்துரைகளின் படி மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.

legislature,bill,cm stalin,online,gambling ,சட்டமன்றம், மசோதா, முதல்வர் ஸ்டாலின், ஆன்லைன், சூதாட்டம்

அரசியல் சாசனத்தின் 34-வது பிரிவின்படி, மாநில பட்டியலில் உள்ள பொது அமைதி, பொது சுகாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு, 'பெட்டிங்' மற்றும் சூதாட்டம் ஆகியவற்றை மையமாக வைத்து சட்டம் இயற்றப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் ஏற்கனவே ஆளுநரிடம் விளக்கம் தரப்பட்டிருக்கிறது. ஆளுநரும் சில கூடுதலான கேள்விகளை எழுப்பியிருந்தார்.

ஆன்லைன் (இணையவழி) விளையாட்டு, ஆப்லைன் (நேரடி) விளையாட்டு இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை மசோதா தெளிவுபடுத்தினால் சட்டச்சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களும் முன்தயாரிப்போடு செயல்படுத்தப்படும் விளையாட்டு என்பதை மறுத்து வருகிறார்கள். இது குறித்து சி.பி.சி,ஐ.டி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா நாளை சட்டசபையில் மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது. ஆன்லைன் தடை சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் மறுபடியும் தாக்கல் செய்ய உரையாற்ற இருக்கிறார். ஆன்லைன் தடைச் சட்ட மசோதா தொடர்பாக இதுவரை ஆளுநர் எழுப்பிய கேள்விகள், அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் அனைத்தையும் சட்டமன்றத்தில் விளக்கி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|
|