Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படுமா?

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படுமா?

By: vaithegi Sun, 11 June 2023 11:27:13 AM

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படுமா?

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தற்போது பணிபுரிந்து கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாத சம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.

மேலும், ஆண்டுக்கு 11 மாதங்கள் (மே தவிர்த்து) ஊதியம் வழங்கப்படுகிறது.இந்த நிலையில், பணிநிரந்தரம், விடுமுறை காலமான மே மாதத்திலும் ஊதியம் தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த மாதம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

salary,part time teacher ,ஊதியம் ,பகுதி நேர ஆசிரியர்

இதையடுத்து அப்போது பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்குவதற்கு எந்த வித உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், ஊதியம் வழங்கப்படாததால் பகுதிநேர ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

மேலும் இது பற்றி பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பகுதி நேர ஆசிரியர்களுக்கு மேமாத ஊதியம் வழங்கப்படும் என்று அரசின் சார்பில் எவ்வித உறுதியும் அளிக்கப்படவில்லை. அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றே தெரிவிக்கப் பட்டது’’ என்றனர்.

Tags :
|